இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கும் திட்டத்திற்கு இன்று திங்கட்கிழமையும் விண்ணப்பிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் துண்டு காணிகள் வழங்கும் திட்டத்தை அண்மையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் மூலம் 45 வயதிற்கு உட்பட்ட ஒருவர் அதிகபட்சமாக 2 ஏக்கர் காணியை பெற்றுவதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இந் நிலையில் விண்ணப்பத்திற்கான இறுதி நாள் 15ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. எனினும் 14, 15ஆம் திகதிகள் விடுமுறை தினமாகையால் இன்று திங்கட்கிழமையும் (16) விண்ணப்பங்களை பிரதேச செயலங்களில் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





