இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இன்று(18) காலை எட்டரை மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் ஐநா பிரேரணை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






