வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27ம் திகதி வரை மழை தொடரும் – விரிவுரையாளர் பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 27ம் திகதி வரை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிகையில்,

வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கமானது தீவிர தாழமுக்கமாக மாறி இந்தியாவின் சென்னையிலிருந்து 270கீ.மீ. கிழக்காக கடலில் நிலை கொண்டிருக்கின்றது. இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த தாழமுக்கம் நகர்வு திசையில் மாற்றத்தைக் கொண்டிருப்பதோடு மிகவும் குறைவான வேகத்தில் நகர்வதால் இன்று இரவு அல்லது நாளை காலை சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் மதுராந்தகத்தில் கரையைக் கடக்கும்.

எனவே வடக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை நாளை வரை தொடர வாய்ப்புள்ளது.
மேலும் எதிர்வரும் 24,25, 26 மற்றும் 27ம் திகதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்க வாய்ப்புள்ளது, எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)