குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டு சேவைகளுக்கான சந்திப்பை முன்பதிவு செய்யாமல் கடவுச்சீட்டை பெற்றுகொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடவுச்சீட்டை விரைவாக வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமாக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் மட்டுமே உரிய ஆவணங்களுடன் திணைக்களத்திற்குச் முன்பதிவு மேற்கொள்ளாமல் செல்ல முடியும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.






