வடக்கு மாகாண புதிய ஆளுநராக முன்னாள் வடக்கு ஆளுநர் திருமதி பி.எச்.எம் சாள்ஸ் நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் தெரிவில் பீபிளஸ் லீசிங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரதீப் அமிர்த நாயகம் மற்றும் சாள்ஸ் ஆகியோரின் பெயர்கள் பெயர்கள் முன்னனியில் இருந்ததாக தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமான ஒருசில தமிழ் கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள் வடமாகாண ஆளுநராக மீண்டும் திருமதி பி.எச்.எம் சாள்ஸை நியமிப்பதற்கு பச்சைக்கொடி கட்டியுள்ளதாக தெரியவருகிறது..
இன்று(17) நியமனக் கடிதம் வழக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





