கொரோனா நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் 16வது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு -2 ஐச் சேர்ந்த 70வயதுடைய முதியவர் ஒருவரே மரணமடைந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவரே இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டது.





