தமிழ் மக்களின் தாயகப் பகுதியான கிழக்கு மாகாணத்தில் பெரும் அழிவுகள் இடம்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பட்டியே சுமணரத்தின தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு செங்கலடி விகாரைக்குரிய புராதன பொருட்கள் புதையுண்டுள்ள காணியின் தரைப்பகுதி இயந்திரங்களால் தோண்டப்படுப்படுகின்றது. ஒரு வாரத்திற்குள் இது நிறுத்தப்படாது விட்டால் பெரும் எதிர்விழைவுகளை மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ள நேரிடும்.
கிழக்கு மாகாணத்தில் பௌத்த சின்னங்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும், என்றார்.





