நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் பசில் ராஜபக்ஷவிற்கானதல்ல அது தனது முடிவே என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் அரசியல் யாப்பு திருத்தங்கள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டிருந்தது.
19ஆம் திருத்தம் சில அரசசார்பற்ற அமைப்புகளின் முயற்சியினால் கொண்டுவரப்பட்டது. 19ஆம் திருத்தத்தில் உள்ள சிறந்த விடையங்கள் 20ஆம் திருத்தத்தில் உள்வாங்கப்படும்.
புதிய அரசியலமைப்பின் நகல் வடிவம் தயாரானதும் மாற்றங்களைக் கோருவதற்கும் புதிய விடையங்களை உள்ளடக்குவதற்கும் அனைவருக்கும் சந்தர்பம் கிடைக்கும், என தெரிவித்தார்





