தென்னாபிரிக்காவிற்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றிவந்த தமிழ் உத்தியோக அதிகாரியான யோகநாதன் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை. இவரது உடலை நாட்டிற்கு எடுத்துவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 40 வயதான யோகநாதன் தென்னாபிரிக்க தூதரக உதவிப் பணிப்பாளராக நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.





