இந்திய மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் தெரிவிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுவொன்றை கையளித்ததாகவும் மீனவர் பிரச்சினைக்கு வெளியுறவு அமைச்சர் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.






