பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து கூட்டுக் குழுவை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான நகர்வுகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை “பொருளாதார நீதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழாம்” என்று அழைக்க உத்தேசித்துள்ளதாக கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த குழுவில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.





