தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை நீடிப்பதாக கட்டளையிட்டுள்ளது.
தியாகி திலீபனின் நினைவேந்தல்களை நடாத்துவதற்கு தடைகோரி பொலிஸார் கடந்த 11ஆம் திகதி நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில் தியாகி திலீபனின் நினைவேந்தல்களை நடாத்துவதற்கு மன்றால் விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 14 நாட்கள் நீடிப்பதாக யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் தெரிவித்தார்





