யாழ்ப்பாணம் வந்தடைந்தார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சற்றுமுன் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

அதன்பின் இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை பார்வையிட்டதோடு பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.