விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.





