நடப்பு வருடமான 2023 இல் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 யை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவாகிய 69,231 நோயாளர்களில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில் அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளர்.
மேலும்,கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 1453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.






