யாழ் வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்ற இரண்டரை கோடி இயந்திரம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரண்டரை கோடி பெறுமதியான ஸ்கேன் இயந்திரத்தை அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதிகரித்து வரும் நோயாளிகளின் நோய் நிர்ணயத்திற்கு இத்தகைய இயந்திரங்களின் பயன்பாடு அத்தியாவசியமாகும்.நோயாளர்களின் சிகிச்சைக்கு இவ் ஸ்கேன் இயந்திரங்கள் வழிகோலும் மருத்துவ உபகரணமாக பெரும்பங்காற்றும்.நெருக்கடியான பொருளாதார நிலையில் பெறுமதி மிக்க மருத்துவ உபகரணம் கிடைக்கப்பெற்றமை சிறப்பானதாகும்.