இலங்கையில் இருந்து சீன அரசு மேற்கொள்ளும் பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்துக்கு பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தமிழக தினமலர் பத்திரிகை கூறுகையில்,
இந்திய எல்லைக்கு அருகில் உள்ள இலங்கையின் யாழ்ப்பாணத்தின் அரியாலை கவுதாரி முனை, அனலதீவு, நயினாதீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில் சீனா கடல் அட்டைப் பண்ணைகளை அமைத்து அதன் வழியாக தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றது.
இந்த பண்ணைகளில் வேலை செய்பவர்கள் சீனாவின் இராணுவ உளவுப் பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகக்கப்படுகின்றது.
இவர்கள் எளிதில் தமிழகத்துக்குள் ஊடுருவுமும் வாய்ப்புள்ளது. எனவே உள்நாட்டு பாதுகாப்பு கருதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்துவது அவசியம். தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும் வருமுன் காப்பது சிறந்தது, என உள்ளது.






