இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து சுவெல்லா பிரேவர்மென் விமர்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.
டேவிட் கெமரூன் கடந்த 2010-2016 முதல் இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தார். 2016ஆம் ஆண்டு பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து டேவிட் கெமரூன் விலகினார்.
கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய பொறுப்புக்கு டேவிட் கெமரூன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





