தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வருவதை முன்னிட்டு பாடசாலை மதில்களிலும்,வாசல்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ளது.இவ் சுவரொட்டிகள் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டப்பட்டுள்ளமை வடக்கு மாகாண கல்விப்புலத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பாடசாலை மதில்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பான முறைப்பாடுகள் கல்வி திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றதனை தொடர்ந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அது தொடர்பில் மேலதிக விசாரனைகளும் எடுக்கப்படவுள்ளது.






