மஹர சிறைச் கைதிகளின் உடல்கள் அடக்கம் செய்யும் கோரிக்கை நிராகரிப்பு, தகனம் செய்ய உத்தரவு

மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 04 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்களை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் இன்று(16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சடலங்களை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.