தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந் வியஸ்காந் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
வனிந்து ஹசரங்க இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமிட்டிருந்தார்.இருந்த போதிலும் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அண்மையில் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்தே வனிந்துக்கு பதிலாக எல்பிஎல் போட்டியில் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எக்ஸ் வலைதளத்தில் சன்ரைஸ் ஐதராபாத் அணியால் வெளியிடப்பட்டுள்ளது.






