ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்களில் மாற்றம்

இஸ்ரேல் -ஈரான்  நெருக்கடி நிலைமை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.

மேலும் , ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், லண்டன்  செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கோரியுள்ளது.

அதற்கமைய, விமான பயணம் ஒரு மணிநேரத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.