ஐந்து சிம் அட்டைகளுற்கு மேல் அனுமதியில்லை – பாதுகாப்பு அமைச்சு

கையடக்க தொலைபேசிகளுக்காக பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்படுவதை குறைக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக விசேட பாதுகாப்பு நடைமுறை உருவாக்கப்பட உள்ளதுடன் இதன்படி ஒருவர் கொள்வனவு செய்யக்கூடிய சிம் அட்டைகளின் எண்ணிக்கை 5 என வரையறுக்கப்பட்டது.

கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.