தற்போதைய நவீன உலகில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களுக்கு ஏற்றவகையில் இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்பின்போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டங்களில் சில திருத்தங்களை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.





