செம்மணி புதைகுழியில் காலணி அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது காலணி ஒன்று அடையாளங்காணப்பட்டுள்ளது. நீல நிற புத்தகப்பையோடு அடையாளம் கானப்பட்ட மனித என்புத் தொகுதிக்கு கீழேயே குறித்த காலணி அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த என்புத் தொகுதியைச் சூழ ஆடை மற்றும் நீலநிற துணி புத்தகப்பை, கண்ணாடி வளையல்களும் முன்னைய அகழ்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் ஆடைகளோ, வேறுவகையான பொருட்களோ மீட்கப்படாத நிலையில் குறித்த என்புத் தொகுதிக்கு அருகில் மாத்திரமே வேறுவகையான பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.