அரசாங்க வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான முதலாம் அணிக்கான 21 நாள் தலைமைத்துவ பயிற்சி நாடளவிய ரீதியில் நேற்றைய தினம்(03) நிறைவடைந்தது.
அந்தவகையில் இயக்கச்சி 55 ஆவது படைப் பிரிவு முகாமில் அரசாங்க வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்ட 176 பட்டதாரிகளுக்கு கடந்த மூன்று வாரங்களாக தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.
குறித்த பயிற்சி நிறைவு நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ராணுவத்தின் 55 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.






