இலங்கை தமிழரசுக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ப.சத்தியலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசியப்பட்டியல் நியமனத்தில் எழுந்த சர்சைகளால் பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து விலகுவதாக துரைசிங்கம் வழங்கிய இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட பொதுச்செயலாளர் வெற்றிடத்திற்கு ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டதாகவும் மாவை சேனாதிராஜா கூறினார்.
ப.சத்தியலிங்கம் வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





