தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கஜேந்திரகுமார் விஜயம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு வருகைதந்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவையும் உளநல சிகிச்சைப் பிரிவையும் தனித்து எடுத்து யாழ்போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் லயன் சி.ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர்களான திரு.ந.காண்டீபன், திரு.க.சுகாஸ், அரச மருத்துவர் சங்க வைத்தியர்கள், தாதியர் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.