கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் 708 பேருக்கு கொரோனா

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 708 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது வரை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 708பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4200 தாண்டியது.