யாழ்ப்பாணத்தில் சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் காெரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இத் தகவலினை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடதக்கது.





