நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்ட  தொழிலாளர்கள் மூவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் கடந்த சில நாட்களாக நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.

இந்நிலையில் அவர்களில் 25 பேருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி  மூன்று பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.