வடக்கு மாகாணத்தில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனைவிட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த மூவருக்கு தொற்று உறுதியானது.
மேலும் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்ட மூவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.





