சுமந்திரனுடன் கூட்டாக பயணிக்க முடியாது – அனந்தி சசிதரன்

வரலாற்றுப் பிழை விட்ட சுமந்திரனுடன் கூட்டாக பயணிக்க முடியாது என ஈழத் தமிழர் சுயாட்சி கழக செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிரடிப்படையினருடன் கலந்து கொண்டிருந்தார். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இன அழிப்பு விடயத்தில் நாங்கள் சர்வதேச விசாரணையை கோரிய போது சுமந்திரன் உள்நாட்டு விசாரணையை கோரினார். வரலாற்றுப் பிழை விட்ட இவருடன் கூட்டாக பயணிக்க முடியாது.

அதிரடிப்படையினர் சகிதம் கூட்டு ஒற்றுமைக்கு வருகைதந்தவரை நான் நிராகரிக்கின்றேன் இதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எந்த நடவடிக்கை எடுத்தாலும் தயங்கமாட்டேன், என்றார்.