தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவாலயத்தில் தியாக தீபம் தீலிபன் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப கட்ட எற்பாடுகள் நடைபெறுகின்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தில் கடந்த வருட நினைவேந்தலில் வைக்கப்பட்ட பதாகைகள் நீக்கப்பட்டு புதிய பதாகைகள் நடப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவுத் தூபியைச் சூழவுள்ள பகுதிகள் துப்பரவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






