கரீபியின் பிரிமீயர் லீக்கில் ஆப்கான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ரஷித் கான் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். மேற்கிந்திய வீரர் ரஷல் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்த இரு அணிகளும் மோதும் போட்டி நேற்று(5) இடம்பெற்றது.
இந்த போட்டியில் ரஷித் கான் வீசிய பந்து ரஷலின் துடுப்பை தாண்டி விக்கெட்டில் லேசாக பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக விக்கெட் மீது பெய்ல்ஸ் கீழே வீழவில்லை, எனினும் அதன் எல்.இ.டி விளக்கு ஜொலித்தது.இதனால் ரஷித் கான் மிகவும் ஏமாற்றமடைந்தார்.
விக்கெட்டிலு பந்து பட்டும் அவுட்டாகாத மகிழ்ச்சியில் ரஷித் கானிடம் சென்று ரஷல் கேலி செய்தார். அதை தொடர்ந்து ரஷலை விளையாட்டாக உதைக்க ரஷித் கான் முயன்றார். ஆனால் ரஷல் ரஷித் கானின் கால்பட வில்லை.
இதனை விளையாட்டாக எடுத்து கொண்ட இருவரும் இறுதியாக கைகொடுத்து பிரிந்து சென்றனர். கிரிக்கெட் போட்டிகள் கணவான்களின் விளையாட்டு என்பது மீன்டுமொருமுறை நிருபனமாகியுள்ளது.





