தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் அறிந்து கொண்டேன். அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். இவ்வாறான தெரிவுகள் தொடர்ந்தும் இருப்பின் மக்களின் தேவைகளை கூட்டமைப்பு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என அனந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு இன்று யாழ் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் கொரோனாவில் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு ஆளுநர் இது தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தாது உள்ளார். சுகாதார அமைச்சும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை, எனவும் குறிப்பிட்டார்.





