தமிழ்ச்செல்வனை நினைவுகூற வேண்டாமென பொலிஸார் முன்னணிக்கு எச்சரிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்திற்கு சென்ற பொலிஸார் தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ளடங்கிய விடையங்களாவன

“சிறிது நேரத்திற்கு முன்னர் பொலிஸார் எமது கொக்குவில் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து தமிழ்ச்செல்வனை நினைவுகூர வேண்டாம் என்று உறுப்பினர்களை எச்சரித்ததுடன் நினைவுகூறுபவர்களும் ‘எடுத்துச் செல்லப்படுவார்கள்’ என்று எச்சரித்தனர். அலுவலகத்தில் இருந்த அனைவரினதும் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களையும் அவர்கள் பதிவு செய்தனர்” என இருந்து.