வவுனியாவில் உள்ள நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டவர்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் பல்வேறு இடங்களில் இருந்து 1154 பேர் வவுனியா பம்பைமடு இராணுவமுகாம், பெரியகட்டு இராணுவமுகாம், வேலங்குளம் விமான படைத்தளம், பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போதே 127 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.





