கொரோனாவால் மேலும் ஐந்து உயிரிழப்பு, மொத்த எண்ணிக்கை 29ஆக அதிரிப்பு

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலதிகமாக ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு02ஐ சேர்ந்த 46 வயதுடையவர், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 68 வயதுடையவர், கொழும்பு 12ஐ சேர்ந்த 58 வயதுையவர், கொழும்பு 14ஐ சேர்ந்த 73 வயதுடையவர், கொழும்பு 15ஐ சேர்ந்த 74 வயதுடையவர்களே இன்று மரணமடைந்துள்ளனர்.