மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாமல் போனமை கவலையளிக்கிறது – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல் போனது கவலை அளிக்கின்றது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக செயற்படும் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 12ம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எந்தவொரு  பதவியையும் ஏற்கப் போவதில்லை. எனது ஓய்வு காலத்தை அமைதியான கழிப்பதற்கு ஆசைப்படுகின்றேன்,  என்றார்.