மஸ்கெலியா பிரதேசத்தில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்ரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேலியகொட மீன்சந்தை கொத்தணியோடு தொடர்புடைய 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக்கியுள்ள நிலையில், இன்று காலை மேலும் 8 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யாரும் மலையகப் பகுதிகளுக்கு தற்போது செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மஸ்கெலியா பொதுசுகாதார வைத்திய அறிவுறுத்தியுள்ளார்.





