தொழிலாளர் கொள்கையில் தளர்வை ஏற்படுத்தியது சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் மார்ச் 14 முதல் வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணி மாறுதல், பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியமில்லை என சவுதி அரேபிய மனிதவளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய தொழிலாளர் கொள்கை அடிமைத்தனத்தின் நவீன வடிவம் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், சவுதி அரேபிய அரசின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சவுதியில் வெளிநாடுகளை சேர்ந்த சுமார் ஒரு கோடிவரையான பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.