கொரோனா தொற்று அச்சம் காரணமாக வேவ்வேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்துள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி களுத்துறை – அகலவத்தை பகுதியைச் சேர்ந்த(56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர் இவ்வாறு நேற்று(08) தற்கொலை செய்துகொண்டார். நாகொடை வைத்தியசாலையின் ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்தார் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும் கம்பஹா – ஜாஎலபகுதியைச் சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





