மாவீரர் நாள் நினைவேந்தலை கடைப்பிடிக்க முற்பட்டதாக புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தைக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் எனும் வியாக்கியனத்தின் கீழ் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படவுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்கள், படங்களை காட்சிப்படுத்தி அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த போதிலும் சாதாரண குற்றிவியல் சட்டத்தின் கிழே அருட்தந்தையை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழ் பொலிஸாரால் கைது





