மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, துருக்கி சிட்டி பகுதியில் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய கேரளக்கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 7 கிலோ 815 கிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதாகியுள்ள சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





