குருநகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இடித்தழிக்க முயற்சி – பொது மக்கள் எதிர்ப்பு

யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட குருநகர் பகுதியில் வடிகால்களுக்கு மேலாக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகள் இடித்து அழிக்க யாழ் மாநகர சபையினர் பெக்கோ இயந்திரத்துடன் வருகை தந்த போதிலும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

ஜனாதிபதி செயலகத்தினுடைய பரிந்துரைக்கு அமைய யாழ்ப பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வடிகாலுக்கு மேலாக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகளே இடிக்க முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது தொடர்பில் தங்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் ஏதும் வழங்கப்படவில்லை. இது அராஜகமான செயல் என அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது