நாட்டில் நிலவும் கொரோனா அபாய நிலைமையையும் கருத்தில் கொள்ளாது யாழ் நகரில் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகின்றனர். இன்றைய தினம்(13) யாழ் நகர் பகுதிகளில் மக்கள் புத்தாடைகள், பொருட்களை வாங்குவதற்காக கூடியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது .
வழமையைவிட இம்முறை கொரோனா தொற்று அச்சத்தால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டாலும் மக்கள் முறையாக சமூக இடைவெளிகளை பேனாதும், சிலர் முகக்காவாசங்களை முறையாக அணியாதும் பொருட்களை கொள்முதல் செய்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இம்முறை தீபாவளி வியாபாரம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் பண்டிகைக்கால அங்காடி வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே யாழ். மாநகர சபை முதல்வரால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







