வடமராட்சியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் –வடமராட்சி துன்னாலை, தக்குச்சம்பா பகுதியில் நேற்று இரவு(14) தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தமையால் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





