யாழ்ப்பாணம் – நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று(14) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த நபரை தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து அழைத்து வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தையில் இருந்து தனிமைபடுத்தல் நிலையத்தில் தொற்று உறுதியாகத நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற தனியார் வாகனம் ஒன்றில் அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறித்த நபரை வாகனத்தில் அழைத்து வந்த சாரதியும் அவருடன் பயணித்த மற்றொருவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.





