யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றமை தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கண்டறியப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைவே கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியினால் சாரதி மற்றும் நடத்துனர் இன்று சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மேலும் சுகாதார நடைமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதால் அந்த பேருந்துக்கான வழித்தட அனுமதிப்பத்திரமும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.





